திருவண்ணாமலை: செய்யாறுபேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் ஜோதி எம்.எல்.ஏ., தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது!!!

sen reporter
0

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரையின் 57வது நினைவு தினத்தையொட்டி, செய்யாறில் ஜோதி எம்.எல்.ஏ., தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.பேரறிஞர் அண்ணா துரையின் 57வது நினைவு தினம், செய்யாறில் ஜோதி எம்.எல்.ஏ., தலைமையில் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக செய்யார் ஆற்றங் கரை பெரியார் சிலை அருகே தி.மு.க., பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன், நகர செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், மாவட்டத் துணைச் செயலாளர் லோகநாதன், ஒன்றிய செயலாளர்களான என்.சங்கர், சீனிவாசன் ஞானவேல், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன், கலைஞர் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top