கோவை:அகில இந்திய அளவில் 18வது இடமும் தமிழ்நாட்டில் 3 வது இடமும் பிடித்து UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை புரிந்த கோவை மாணவி ஸ்ருதி!!!

sen reporter
0

அகில இந்திய அளவில் 18வது இடமும் தமிழ்நாட்டில் 3 வது இடமும் பிடித்து UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை புரிந்த கோவை மாணவி ஸ்ருதிக்குபொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் பாராட்டு.யு பி எஸ் சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதில் தனக்கு மட்டும் இன்றி பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கு இதில் பங்கு உண்டு என யு பி எஸ் சி சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 18வது இடமும் தமிழ்நாட்டில் 3 வது இடமும் பிடித்து சாதனை புரிந்த கோவை மாணவி ஸ்ருதிக்கு பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழா தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 18வது இடம் பெற்று கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஸ்ருதி சாதனை புரிந்துள்ளார்.ஸ்ருதி கோயம்புத்தூரில் உள்ள ஹிந்துஸ்தான் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்துள்ளார். கல்வியை மதிக்கும் குடும்பத்தில் வளர்ந்த அவர், தனது கல்லூரி காலத்திலேயே சிவில் சர்வீசில் சேர வேண்டும் என்ற இலக்கை வைத்திருந்தார். அவரது தந்தை ஒரு தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றுகிறார், தாய் இல்லத்தரசியாக உள்ளார்.பொறியியல் படிப்பு முடிந்த பிறகு சில காலம் வேலை செய்த ஸ்ருதி, பின்னர் அந்த வேலையை விட்டு முழுமையாக UPSC தேர்வுக்குத் தயாராக முடிவு செய்தார். முதல் இரண்டு முயற்சிகளில் முன்னிலைத் தேர்வை தாண்ட முடியாதபோதும், மனம் தளராமல் தொடர்ந்து படிப்பை மேற்கொண்டார்.மூன்றாவது முயற்சியில் அவர் முதன்முறையாக முன்னிலைத் தேர்வைத் தாண்டி, அதன் பின்னர் மெயின்ஸ் தேர்விலும் சிறப்பாக செயல்பட்டு இண்டர்வியூ நிலையை அடைந்தார். தொடர்ந்து செய்த உழைப்பின் பலனாக இறுதிப் பட்டியலில் அகில இந்திய அளவில் 18 வது இடம் பெற்று வெற்றி பெற்றார்.அவருக்கு கோவையில் பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அவர் பயின்ற பள்ளி மற்றும் கல்லூரி, உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வந்திருந்து வாழ்த்தினர்.தொடர்ந்து பேசிய ஸ்ருதி தயாரிப்பு காலத்தில் அவர் டெல்லியில் பயிற்சி மையத்தில் அடிப்படை பயிற்சி பெற்றதாகவும் பின்னர் கோயம்புத்தூரில் இருந்து சுயமாக படிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் உதவியுடன் மெயின்ஸ் மற்றும் இண்டர்வியூ தயாரிப்பை மேற்கொண்டதாக தெரிவித்தார்.மேலும் மெயின்ஸ் தேர்வில் வெற்றி பெற முந்தைய ஆண்டுகளின் கேள்வித்தாள்களை ஆய்வு செய்தல் மற்றும் குறுகிய குறிப்புகள் தயாரித்தல் ஆகியவற்றை அவர் முக்கியமாக பின்பற்றியதாக கூறினார். இந்த வெற்றி தனக்கு மட்டும் இன்றி பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கு இதில் பங்கு உண்டு என்று தெரிவித்தார். UPSC தேர்வில் வெற்றி பெற விரும்பும் மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து, படித்ததை அடிக்கடி மறுபார்வை செய்ய வேண்டும் என்றும் சரியான மனப்பாங்கு மிகவும் முக்கியம் என்றும் ஸ்ருதி அறிவுறுத்தியுள்ளார்.


தொடர்ந்த முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் UPSC போன்ற கடினமான தேர்விலும் வெற்றி பெற முடியும் என்பதை கோவை மாணவி ஸ்ருதி ஆர் நிரூபித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top