இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாக இன்று வரை கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.ஆகவே இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த ஆண்டு ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை முன்னிட்டு கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத்தில் தலைமை இமாம் ஷேக் இப்ராஹிம், துணை இமாம் அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று தொழுதனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் சுன்னத் ஜமாத் தலைவர் ஹாகி இப்ராஹிம், துணை தலைவர் பாட்ஷா, செயலாளர் ஹைதர் அலி, துணை செயலாளர் அக்பர், தலைமை இமாம் ஷேக் இப்ராஹிம், துணை இமாம் அப்துல் சலாம், முஹமது அலி, பொருளாளர் ஷாஜஹான், ஆடிட்டர் காதர், கமிட்டி உறுப்பினர்கள் முகமது அலி, தாஜ், அப்துல் ரஷீத், அபுதாஹிர், ஜவாஃபர் அலி, ஜனா சுலையின், மைதீன், முஹமது கபீர், அலாவுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை:ரம்ஜானை முன்னிட்டு செல்வபுரம் பகுதியில் உள்ள ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது!!!
3/21/2026
0
