வேலூர்:காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை எல்லையில் துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை!!!
3/26/2026
0
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழக ஆந்திர எல்லை பகுதியான காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் துணை ராணுவத்தினர் மற்றும் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிர வாகன சோதனையானது 24 மணி நேரமும் தொடர்ந்து இடைவிடாது நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆந்திராவிலிருந்து பரிசு பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் கொண்டு வருவதை தடுக்கும் விதமாக இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
