வேலூர்:குடியாத்தம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதாவுக்கு புதிய நீதி கட்சி குடியாத்தம் நகர செயலாளர் உற்சாக வரவேற்பு!!!

sen reporter
0

குடியாத்தம் தனி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் பரிதாவுக்கு புதிய நீதி கட்சியின் குடியாத்தம் நகரச் செயலாளர், கைத்தறி காவலன் ரமேஷ் கைத்தறி ஆடையை அணிவித்து வரவேற்பு அளித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வரவேற்பின் போது ரமேஷூடன் குடியாத்தம் நகர அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் ஜே. கே. என். பழனி, பாஜக நகரத் தலைவர் ஜெகன், பாமக நகர செயலாளர் எஸ். குமார் மற்றும் புதிய நீதி கட்சியின் மாவட்ட மாணவர் அணி செயலாளர் எஸ். பி. நந்தகுமார், அதிமுக பொறுப்பாளர்கள் எல். ஏ. அன்பழகன், சந்திரா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இவர்கள் அனைவரும் அதிமுக வேட்பாளர் பரிதாவுக்கு வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top