கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ம கலாமணி ஜெகநாதன் வேட்புமனுவை தாக்கல்!!!
3/30/2026
0
தமிழ்நாட்டில் நடைபெற்றவுள்ள சட்டமன்ற தேர்த்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 234 தொகுதிகளிலும் இன்று ஒரே நாளின் அக்கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவினை தாக்கல் செய்கின்றனர்.அதேபோல் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ம கலாமணி ஜெகநாதன் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் தொண்டர்களுடன் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்த ம கலாமணி ஜெகநாதன் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் வினோத் குமாரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது தான் 3 வது முறையாக இதே தொகுதியில் போட்டியிடுவதாகவும், ஏற்கனவே உள்ள சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கே செல்வதில்லை எனவே தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
