திருவண்ணாமலை:செய்யாறு இந்தோ அமெரிக்கன் சி.பி.எஸ்.இ.,பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா!!!

sen reporter
0

செய்யாறில் உள்ள இந்தோ அமெரிக்கன் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா வெகு விமரிசையாக நடந்தது. பெற்றோர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு தங்களது பிள்ளைகள் பட்டம் பெறுவதை கண்டுகளித்தனர்.செய்யாறில் பிரசித்தி பெற்ற இந்தோ அமெரிக்கன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயின்று வரும் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் டாக்டர் இராமதாஸ், அப்பாய் அரங்கில்அறக்கட்டளையின் துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மெட்ரிக் பள்ளியின் முதல்வர்அ.ப.சையத் அப்துல் இலியாஸ் முன்னிலை வகித்தார்.மழலை கோ.நி.சகானா அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் இந்தோ அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஜெ.எழிலரசி மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.விழாவில் சி.பி.எஸ்.இ., பள்ளியின் முதல்வர் சுதா கார்த்திக், மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் க.கோவேந்தன், ஆசிரியைகள் எம்.அகல்யா, பி.திவ்யா ஆகியோர் பட்டம் பெற்ற மழலையர்களை வாழ்த்தி பேசினர்.ஆசிரியர்கள் சக்திவேல்,ஜமுனா, ரம்யா, திவ்யலட்சுமி, சரண்யா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.நிகழ்ச்சியை நிவேதா கோகுல்தொகுத்து வழங்கினார்.மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவை கண்டுகளித்தனர்.மழலை வி.தியான்நன்றி கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top