வேலூர்:துளிர் திறன் அறிதல் தேர்வில் வெற்றி பெற்ற சேர்க்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்!!!
4/01/2026
0
மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வை நடத்ததிவருகிறது. 27வது ஆண்டாக இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் துளிர் திறனறிதல் தேர்வு 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 20 மையங்களில் நடைபெற்றது. இதில் இயற்பியல், வேதியியல், உயிரியல், மரபுசார் அறிவியல், புதிர்க் கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், துளிர் கட்டுரைகள், தற்கால நிகழ்வுகள், அறிவியல் தொழில்நுட்பம்,சொற்சுருக்கம்,சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களையும் அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சேர்க்காடு அரசினர் மேல் நிலைப்பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் எம்.சைமன் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், காட்பாடி ஒன்றிய தலைவர் ஆர்.சுதாகர் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினர்.முன்னதாக பள்ளியின் துளிர் திறனறிதல் தேர்வு ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.சரிதா வரவேற்று பேசினார். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் பெ.இளங்கோ பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பி.கே.வசந்த், டி.சுப்புரத்தினம், கணினி ஆசிரியர் எஸ்.ஆனந்த் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இப்பள்ளியில் தேர்வெழுதிய 71 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மேலும் காட்பாடி வட்டத்தில் உள்ள காங்கேயநல்லூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 46 மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் முத்து.சிலுப்பன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பே.அமுதா, என்.கோட்டீஸ்வரி, பி.சுகுமாறன், பா.ராஜேந்திரன் பொருளாளர் ஆர்.காயத்ரி ஆகியோர் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
