திருவண்ணாமலை: செய்யாறு தொகுதி மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தேர்தலை சந்திக்கிறேன் இளம் வேட்பாளர் என்.ஜெ.பிரவீன்!!!

sen reporter
0


செய்யாறு சட்டசபை தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக வழக்கறிஞர் என்.ஜெ.பிரவீன், தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.செய்யாறு நகரில் வசித்து வரும் வழக்கறிஞர் என்.ஜெ.பிரவீன்  தொகுதி மக்களுக்காக உழைக்க வேண்டும் என, சுயேட்சை வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார்.இதுகுறித்து, வேட்பாளர் என்.ஜெ. பிரவீன் கூறியதாவது;மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற, எண்ணம் எனக்கு சிறு வயதில் இருந்தே இருந்து வருகிறது.‌ எனது பூர்வீகம் செய்யாறு சட்டசபை தொகுதிக்குட்பட்ட கீழ்நெல்லி கிராமமாகும். எனது தாத்தா நரசிம்மன்.‌ கடந்த 40 ஆண்டுகளாக கீழ்நெல்லி ஊராட்சியில் மூன்று முறை ஊராட்சி தலைவர் பதவியை வகித்து வந்தார். அப்பொழுது எனது தாத்தா மூலம் கீழ்நெல்லி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்கள் இன்றும் எனது தாத்தாவின் பெயர் சொல்கிறது. இதுதவிர, 1971ம் ஆண்டு, செய்யாறில் இருந்து சித்தாத்தூர் வழியாக தனியார் பஸ்சை கொண்டு வந்ததும் எனது தாத்தா தான். இந்த பஸ் இன்றும் இயக்கப்பட்டு வருகிறது.‌ இதை நானும் கேட்டிருக்கிறேன்.எனவே, எனது தாத்தா போல் நானும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் செய்யாறு தொகுதியில் போட்டியிடுகிறேன். மக்கள் எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால், செய்யாற்றில் தடுப்பணை கட்டுவேன். அரசு மகளிர் கல்லூரியை கொண்டு வருவேன். தொகுதி மக்களுக்காக எனது முழு நேரத்தையும் செலவழிப்பேன்'. இவ்வாறு இளம் வயது வேட்பாளர் என்.ஜெ.பிரவீன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top