வேலூர்:கே. வி. குப்பம் தனி தொகுதி புரட்சி பாரதம் வேட்பாளர் ஜெகன் மூர்த்தியை ஆதரித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்!!!

sen reporter
0

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் குடியாத்தம் மற்றும் கே. வி .குப்பம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் தனித் தொகுதிகளாகும். இந்நிலையில் வரும் 23ஆம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கே. வி. குப்பம் தனி தொகுதியில் புரட்சி பாரதம் கட்சியின் வேட்பாளர் ஜெகன் மூர்த்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வருகை தந்தார். அவர் வருகை தந்த தகவல் அறிந்து வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வேலழகன், காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான ராமு ஆகியோர் கே. வி. குப்பத்துக்கு விரைந்து சென்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸை சந்தித்து ஆசி பெற்றனர். இதையடுத்து இருவரும் தங்களது தொகுதிகளான அணைக்கட்டு (வேலழகன்) காட்பாடி (ராமு) ஆகியோர் அவர்களது சொந்த தொகுதிகளுக்கு திரும்பி வந்து தொடர் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டனர். இந்த சந்திப்பின்போது அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top