வேலூர்:காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு!!!

sen reporter
0

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. காட்பாடி தொகுதியில் இருமுனை போட்டி நிலவுகிறது. அதாவது அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. கடந்த முறை சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய அதிமுக வேட்பாளர் ராமு இந்த முறை நூதன முறையில் பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டார். அந்த பிரச்சாரத்தில் கடந்த 5ம் தேதி காட்பாடி பவானி நகர், முத்தமிழ் நகர், காட்பாடி ரயில் நிலையம், பழைய காட்பாடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு திறந்த ஜுப்பில் இருந்து இறங்கி வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்காளர்கள் ஆரவாரத்துடன் ராமுவை வரவேற்று தாங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது அமமுக பிரமுகர் ராஜா மற்றும் பல கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிமுக வேட்பாளர் ராமுவுடன் சென்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top