வேலூர்:காட்பாடி காந்திநகர் துளிர் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா!!!
4/04/2026
0
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காந்தி நகரில் அமைந்துள்ள துளிர் அறிவியல் ஆய்வு பள்ளியில் 23ஆம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நீங்களும் நாங்களும் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்றது. மழலையர் பட்டமளிப்பு விழாவுக்கு பள்ளியின் தாளாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கி மழலையர் பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டுதலுடன் நடைபெறும் இப் பள்ளியானது கற்பது கற்கண்டே என்ற சிந்தனையுடன் மாணவ, மாணவிகள் புரிந்து கொண்டு கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இன்று இப்பள்ளியில் பயின்று உயர்கல்விக்காக செல்லும் மாணவர்கள் புரிந்து கொண்டு படித்து மேலும் வளர வேண்டும் என்றார்.முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் த.கனகா வரவேற்றுப் பேசினார். பள்ளியின் அறங்காவலர் வி.பழனி, நீங்களும் நாங்களும் அறக்கட்டளையின் மேலாளர் நிலா பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளியில் பயிற்சி பெற்ற இருபத்தைந்து மாணவ, மாணவிகளுக்கு மழலையர் பட்டம் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.பள்ளியின் ஆசிரியர்கள் செ.சித்ரா, வெ.பாரதி, சு.மலர்கொடி, தன்னார்வ தொண்டர்கள் பி.கார்த்திகேயன், ஜே.எபினேசர் பால், சரவணதேவ், கே.பிரகாஷ், முகேஷ், என்.பிரியா, ஜெயமுருகன், ரபிகா, தனுஷ், கேத்தரின் ஆகியோர் பங்கேற்றனர்.5ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ரக்ஷிதா, தீபாஸ்ரீ, கே.யுவஸ்ரீ, டி.யுவஸ்ரீ, செரியா மெர்லினா, ஸ்ரீதனிஷ், கோவர்தன், சுகவாணன், ரோஷன் ஆகியோரின் கலைநிகழ்சிகள் நடைபெற்றது.
