வேலூர்:சலவன்பேட்டை மண்பாண்ட தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார் தவெக வேட்பாளர் வினோத் கண்ணன்!!!

sen reporter
0

வேலூர் சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிடும் வினோத் கண்ணன், மாநகராட்சி பகுதிகளான சலவன்பேட்டை, குட்டைமேடு, கொசப்பேட்டை பகுதிகளில் காலை வேளையில் வாக்கு சேகரித்தார்.சலவன் பேட்டையில் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளர்களுடன் நேரில் சென்று வாக்கு சேகரித்தார் வேட்பாளர் வினோத் கண்ணன். மண்பாண்டம் செய்யும் தொழில் குறித்தும், இதற்கு அரசு ஏதாவது உதவி செய்கிறதா? என்றும் கேட்டறிந்தார். பின்னர் மண்பாண்டம் செய்யும் கருவியை இயக்கி பார்த்த வினோத் கண்ணன், உங்களது வாழ்வாதாரம் பெருக அரசாங்கத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்கு தன்னை எம்எல்ஏவாக தேர்வு செய்யும் படியும் வேண்டுகோள் விடுத்தார்.மேலும் அவர் பேசுகையில், வேலூர் தொகுதியில் இதுவரை இருந்த எம்எல்ஏக்கள் செய்யாத திட்டங்களை நிறைவேற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். வேலூர் மக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி போன்றவற்றை முழுமையாக நிறைவேற்ற எனக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பிரச்சாரம் மேற்கொண்டார்.பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றி கழக வேலூர் பகுதி செயலாளர் நிதின், ஆல்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top