வேலூரில் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் சந்திப்பு!!!
4/22/2026
0
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளான ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதி சோதனை சாவடிகளில் கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்தல் பணிக்கு வரும் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை தேவைகளான தங்கும் வசதி, உணவு, குடிநீர் உள்ளிட்டவை செய்து தரப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவர் குழுவும், தீயணைப்புத்துறை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களிக்க அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
