கோவை:கவுண்டம்பாளையம்சட்டமன்றதொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் துடியலூர் அரவான்திடல்பகுதியில்பிரச்சாரத்தைதொடங்கினார்!!!
4/03/2026
0
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் துடியலூர் அரவான் திடல் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசணம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.தொடர்ந்து கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட துடியலூர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, முத்து நகர், வி ஐ பி நகர், சேரன் காலனி, விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள முக்கியஸ்த்தர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டாணிக் கட்சி நிர்வாகிகளின் இல்லங்களுக்குச் சென்று சால்வை அணிவித்தும் நோட்டீஸ் வழங்கியும் ஆதரவு திரட்டினார். அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு வழங்கினர்.
