கோவை:கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கவுண்டம்பாளையம் பகுதியில் ரேக்ளா மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பு!!!

sen reporter
0

 கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் இன்று கவுண்டம்பாளையம், ஹவுசிங் யூனிட், உள்ளிட்ட பகுதியில் கூட்டணி கட்சியினர் இரு சக்கர வாகனங்களில் புடை சூழ ரேக்ளா மாட்டு வண்டியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். அவருக்கு கட்சித் தொண்டர்கள் ஆள் உயர மாலை அணிவித்தும், கிரீடம் அணிவித்தும் சிறப்பான வரவேற்பு வழங்கினர்.தடர்ந்து பேசிய வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமார் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஒன்றுமே செய்யவில்லை. அதனால் சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டுள்ளனர். இவர்கள் செய்ததாக ஒரு சாதனையும் சொல்ல முடியாது. வீட்டு வரியை உயர்த்த மாட்டேன் என்று சொன்னார்கள், மின்சார கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டணங்கள் எதுவும் உயராது என்று வாக்குறுதி கொடுத்து வந்தார்கள். இதை நிறைவேற்றி உள்ளார்களா. செய்யவில்லை இன்று அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர்.எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை அண்ணா திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்களையே முறையாக செயல்படுத்தவில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவர்கள் செய்த ஒரே சாதனை 1500 எப் எல் டு என்னும் 11 டு 11 மதுபான கடைகளை திறந்தது மட்டுமே. ஆகவே இது அகற்றப்பட வேண்டிய ஆட்சி இதனை வீட்டுக்கு அனுப்ப மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top