கோவையில் GHL இந்தியா வெஞ்சர்ஸ் ஜாமின் பிராப்பர்டீஸ் புதிய அலுவலகம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது!!!

sen reporter
0

 கோவை டாடாபாத் பகுதியில் GHL India Ventures மற்றும் Jamin Properties நிறுவனங்களின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவில் பிரதம விருந்தினராக பத்மஸ்ரீ டாக்டர் ஜி. பக்தவத்சலம், தலைவர், KG Hospital கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.மேலும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி, கோயம்புத்தூர் திரையரங்க நடிப்பு சங்க தலைவர் ஸ்ரீமன் சுந்தரம், Karunya University இயக்குநர் டாக்டர் கே.எஸ்.ஆர். கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனுடன் நலம் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரியதர்ஷினி, பார்க் இன்ஸ்டிட்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி, மெட்ரோ சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் முரளிதரன், ஜிஎம்ஏசி அசோசியேட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி லயன் டாக்டர் விஸ்வநாதன், ஸ்டார் ஜெராக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜனகராஜன் உள்ளிட்ட தொழில் முனைவோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.விருந்தினர் வரவேற்பு மற்றும் பதிவு நிகழ்வுடன் தொடங்கியது. தொடர்ந்து வரவேற்புரை, ரிப்பன் வெட்டும் விழா, பாரம்பரிய விளக்கேற்றம், அலுவலக பார்வை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் தலைமை உரை மற்றும் பிரதம விருந்தினர் உரை நடைபெற்றது.இந்த புதிய அலுவலகம் தொடங்கப்பட்டதன் மூலம் கோவையில் வணிக வளர்ச்சிக்கும், முதலீட்டு வாய்ப்புகளுக்கும் புதிய திசை திறக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top