கோவை மாநகராட்சி ஊழியரின் நேர்மை குப்பையில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை ஒப்படைப்பு மாநகராட்சி ஆணையர்பாராட்டு!!!
5/27/2026
0
கோவை மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் தவறுதலாக விழுந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை, பேராசைப்படாமல் நேர்மையுடன் அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைத்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர் சக்திவேல் என்பவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருவதுடன், அவரது இந்த மனிதநேயச் செயல் கோவை மாநகராட்சிக்குத் தனி நற்பெயரைத் தேடித் தந்து உள்ளது.கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 69, பாரதி பார்க் 4-வது வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்களின் வீட்டில் இருந்த குப்பைகளை அகற்றும் போது, எதிர்பாராத விதமாகத் தங்களின் 3 பவுன் மதிப்பு உள்ள தங்கச் சங்கிலியையும் (Gold Chain) குப்பையோடு குப்பையாகத் தவறுதலாக வீசி உள்ளனர்.குப்பை சேகரிக்கும் கோவை மாநகராட்சி பணியாளரான சக்திவேல் என்பவரிடம் தான் சேகரித்த குப்பைகளைச் பார்த்த போது அதற்குள் புதைந்து கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைக் கண்டுபிடித்தார். அதைத் தன்வசமே வைத்துக் கொள்ளாமல், சற்றும் யோசிக்காமல் உடனடியாக அதன் அசல் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அவர்கள் முன்னிலையிலேயே நேர்மையான முறையில் நகையைத் திரும்ப ஒப்படைத்தார்.கண்டெடுத்த நகையை அப்படியே ரிட்டர்ன் செய்த தூய்மைப் பணியாளரின் இந்த ‘உன்னத’ நேர்மையைக் கண்டு நெகிழ்ந்து போன உரிமையாளர்கள், அவருக்குக் நன்றி தெரிவித்தனர். இந்த விபரம் அறிந்து நெகிழ்ந்துபோன கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், நேர்மையின் சிகரமாக விளங்கிய பணியாளர் சக்திவேலை மாநகராட்சி ஆணையர் சார்பாகப் அதிகாரிகள் பொன்னாடை அணிவித்துத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் (Congratulations) பாராட்டுக்களையும் தெரிவித்துக் உள்ளார்.எத்தனையோ பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த தற்போதைய கால கட்டத்திலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த வார்டு 69 பணியாளர் சக்திவேலின் இந்தச் செயல் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும், சமூக வலைத்தளங்களில் வைரல் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.
