கோவையில் கேஸ் கன் பர்னரில் நெருப்பை பயன்படுத்தி இளையராஜா அவர்களின் சுடர் ஓவியத்தை வரைந்த ஓவியர் யூஎம்டி அவர்கள் கூறியது ராஜா இதில் சிறிய அளவு கிட்டார் தகட்டில் செய்து அதை நெருப்பு பரவாமல் முழு ஓவியமாக வரைய சிறிய தடுப்பாக வைத்து சுடர் ஓவியத்தை வரைந்து முடித்துள்ளேன் இளையராஜா அவர்களின் 50 ஆண்டு இசை விழாவை கொண்டாடும் விதமாக அவருடைய இசை உழைப்பை போற்றும் விதமாக இரண்டு நாள் சமயம் எடுத்து அதாவது 50 மணி நேரம் சமயம் கொண்டு 50 ஆண்டு இசை மேதையை போற்றும் விதமாக இளையராஜா அவர்கள் இசை கம்போசிங் செய்வது போலவும் இளையராஜா 50 என்ற வாசகத்துடன் நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா என்று இளையராஜா அவர்களை இளமையாக வாழ்த்துவது போல வாசகம் எழுதி இந்த 50வது ஆண்டு இசை விழாவை ஒரு இசை ரசிகனாக இந்த ஓவியம் மூலம் வரைந்து கொண்டாடுகிறேன் இந்த இசை ஓவியத்தை சுடர் நெருப்பு ஓவியத்தை இசை மேதை இளையராஜா அவர்களுக்கு நினைவு பரிசாக வழங்க உள்ளேன்.
