வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!!!
5/25/2026
0
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் வே. ரா. சுப்புலட்சுமி தலைமை வகித்தார். அவர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பூ. காஞ்சனா, துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
