வேலூர்:மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை குடும்பத்துடன் சேர்த்த தமுமுகவினர்!!!

sen reporter
0

வேலூர் மேற்கு மாவட்டம், குடியாத்தத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வேப்பூர் கிராமத்தில் இருப்பதாக தகவல் வந்தது. இதை அறிந்து அங்கு சென்ற தமுமுகவினர் பெண்ணைப் பற்றி விசாரித்து அவரின் குடும்பம் கீழ்விஷாரம் நகரத்தில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அங்குள்ள தமுமுக நிர்வாகி மூலம் அவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவருடைய குடும்பத்தினர் குடியாத்தம் வேப்பூர் கிராமத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தமுமுக நிர்வாகிகள் அப்பெண்ணையும், அவரின் குடும்பத்தையும் குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்து அங்குகிருந்து முறைப்படியாக அவருடைய குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டார். முன்னதாக வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அப்பெண்ணிற்கு இருக்க இடம், உண்ண உணவு கொடுத்து தேவையான உதவிகள் செய்தனர்.இந்த மனித நேய பணியில் S.ஷஹாபுத்தீன், தலைவர், தமுமுக, மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகுடியாத்தம் வேலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top