பல்வேறு நெருக்கடிகளை கடந்து தமிழகத்தின் 18வது முதலமைச்சர் ஆக தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் அவருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 10 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகர் பதவி பிரமாணத்தை செய்து வைத்தார். இன்று தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் தவெக வழக்கறிஞர்கள் உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது உற்சாகமான கொண்டாட்டத்தை பகிர்ந்து கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறும் போது தமிழகத்தின் ஊழல் சக்தியாகவும், போதை சக்தியாகவும், இருந்த தீய சக்தி திமுகவை ஒழித்து தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையுடன் இந்த தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்துள்ளதாகவும் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஜோசப் விஜய் நல்லாட்சி புரிவார் என்றும் தமிழகத்தில் இன்னும் 50 ஆண்டுகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை அகற்ற முடியாது எனவும் தெரிவித்தனர். மேலும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் முதல் கையெழுத்தாக மதுவை ஒழிக்கும் விதமாக மதுவிலக்கில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
கோவை:தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுகொண்ட ஜோசப் விஜய் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!!
5/10/2026
0
