கோவையில் முதியோர்களுகான சிகிச்சை மையம் மற்றும் நீண்டகால பராமரிப்புக்கான மருத்துவமனை ஜெரி கேர் துவங்கப்பட்டுள்ளது!!!
6/15/2026
0
கோவையில் முதியோர்களுகான சிகிச்சை மையம் மற்றும் நீண்டகால பராமரிப்புக்கான மருத்துவமனை ஜெரி கேர் துவங்கப்பட்டுள்ளதுஒருங்கிணைந்த முதியோர் பராமரிப்பில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமான ஜெரி கேர், மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பிரத்யேகமான , முதியோர் நல மருத்துவர் தலைமையிலான கோவையின் முதல் பராமரிப்பு மையத்தையும் (SNF) மற்றும் நீண்டகால சிகிச்சைக்கான மருத்துவமனையையும் தொடங்கி உள்ளது. லுலு மாலுக்கு எதிரே, லட்சுமி மில்ஸ் ஜங்ஷனில் மையமாக அமைந்துள்ள இந்த 100 படுக்கைகள் கொண்ட மையம், முதியோரின் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இசிஜி, எக்கோ, அல்ட்ராசவுண்ட், மருந்தகம், ஆய்வகம், தடுப்பூசிகள், பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு சேவைகளுடன், மூத்த குடிமக்களுக்கான ஒரு பல்துறை மூத்தோர் மருத்துவ வெளிநோயாளர் சிகிச்சை மையமாகவும் இந்த மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மையம் கங்கா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராஜா சபபதியால் திறந்து வைக்கப்பட்டது. இதில் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவன தலைவர் சவுந்தரராஜன் மற்றும் சுகுணா குரூப் நிர்வாக இயக்குநர் லட்சுமிநாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஜெரி கேர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் லட்சுமிபதி ரமேஷ் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.கோவையில், சிறப்பு மூத்தோர் பராமரிப்பை எளிதாகக் கிடைக்கச் செய்வதே ஜெரி கேரின் நோக்கம் என்றும் இதன் மூலம் முதியோர்கள் கண்ணியத்துடனும், வசதியுடனும், சிறந்த வாழ்க்கைத் தரத்துடனும் முதுமையில் வாழ இது உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
