நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 42 வது வார்டு பகுதியில் ரூ 29லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி துவங்கப்பட்டது.
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டு பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் மிக வேகமாக நடைப்பெற்று வருகிறது. இதன் ஒரு அம்சமாக 42 வது வார்டு பகுதியில் ரூ 29 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி துவங்கப்பட்டது. வார்டு கவுண்சிலர் ஸ்டாலின் பிரகாஷ் முன்னிலையில் மாநகர மேயர் மகேஷ் சாலை மேம்பாட்டு பணியினை துவக்கி வைத்தார். உடன் மாநகர மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கலைவாணி மாநகர திமுக செயலாளர் ஆனந்த், பகுதி பொறுப்பாளர் துரை இராஜக்கமங்கலம் ஒன்றிய துணை தலைவர் சரவணன் ,தொண்டரணி எம்.ஜே.ராஜன் ,பொறியாளர் அணி இராதாகிருஷ்ணன் ஆறுமுகம், லீனஸ் கிளிட்டஸ் சேவியர் ஜஸ்டஸ் பாபா, ஜெலஸ்டின் சித்திக் சபரி ஆனந்த் ஷேக் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.