தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் இன்று (29)வெளியிடப்பட்டது .இந்த திரைபடம் சாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும் இதனை திரையிடக்கூடாதென்று வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதை அடுத்து இத்திரைப்படம் வெளியானது. குமரி மாவட்டம் நாகர்கோயிலில் மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டு வரும் திரையரங்குக்கு அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுப்பதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.