நாகர்கோவில் மாநகராட்சியில் 43.60 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் ரெ. மகேஷ் துவக்கி வைத்தார்.
நாகர்கோவில் மாநகர 3-வது வார்டு எஸ்.எஸ்.நகர் 5,9 மற்றும் 10-வது குறுக்கு தெருக்களில் ₹33 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும்
12-வது வார்டு வணிகர் தெரு மற்றும் பிள்ளையார் கோவில் தெருக்களில் ₹6.60 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும்
40-வது வார்டு வைத்தியநாதபுரம் சானல் கரையில் ₹4 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளையும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.
உடன் மண்டல தலைவர்கள் .ஜவகர், .அகஸ்டினா கோகிலாவாணி,
மாமன்ற உறுப்பினர்கள் அருள் சபிதா ரெக்ஸலின், .சுனில், மாநகர அவைத் தலைவர் .பன்னீர் செல்வம், பகுதி செயலாளர்கள் . துரை, சேக் மீரான், தி.மு.க செயற்குழு உறுப்பினர் .சதாசிவம்,
இராஜாக்கமங்கலம் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் . சரவணன், தொண்டர் அணி ராஜன், சுகாதார ஆய்வாளர்கள் . ராஜா, பகவதி பெருமாள், வட்டச் செயலாளர்கள் . சகாய மைக்கேல் ரெமிஜியூஸ், திரு.முத்தரசன், .முகம்மது பாரி ஆறுமுகம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.