தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து உடனடியாக பூர்த்திசெய்து வரும் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் பொன்சந்திரகலா அவர்களை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், மாதத்திற்கு ஒருமுறை பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் நலம் விசாரித்தும், அவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து துரித நடவடிக்கை எடுக்கும் பொன்சந்திரகலாவை ஆண்டிபட்டி நகர் பொதுமக்கள் பாராட்டியும், வாழ்த்துக்கள் தெரிவித்தும் உள்ளனர்
.மேலும், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் அவர்களின் ஆலோசனைப்படி அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் அரசியல் சார்ந்த மற்றும் அரசியல் சாரா கட்சியினரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.பொதுமக்கள் நலப்பணிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுவரும் பேரூராட்சி தலைவர் பொன்சந்திரகலா அவர்களை ஆண்டிபட்டி நகர பொதுமக்கள் மட்டுமின்றி தேனி மாவட்ட மக்கள் முழுவதும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக நேரடியாக பாதிப்படைந்த பொதுமக்கள் வீட்டிற்கே சென்று தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கள ஆய்வு தகவல் கூறுகிறது. பொதுமக்கள் நலனில் அக்கறை கொள்ளும்ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் பொன்சந்திரகலாவை பொதுமக்களோடு சேர்ந்து நாமும் பாராட்டலாம்..