தேனி மாவட்டம் சீலையம்பட்டி பைபாஸ் சாலையில் குப்பைக் கழிவுகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் அவதிப்படுகின்றனர். வாகன ஒட்டிகள் சாலையில் செல்லும்போது குப்பைகள் காற்றில் பறப்பதால் வாகன ஒட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் நிலை அடிக்கடி நடக்கிறது.மேலும்,
இப்பகுதியில் குடியிருப்புகளும் உள்ளதால் குப்பைக்கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். குப்பைக்கழிவுகளால் நோய்தொற்று ஏற்பட்டு விடும் என்ற அச்சஉணர்வும் இப்பகுதி மக்களிடையே உள்ளது.குப்பைகளால் மேலும், ஒரு விபத்தோ, நோய்தொற்றோ ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகளும், இப்பகுதி மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்