நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி தளபதி விஜய் கல்வியியல் இயக்கம் சார்பில் ஏழை பள்ளி மாணவிக்கு மேற்படிப்புக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது! திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசிக்கும் செய்யது இப்ராஹிம் என்பவரது மகள் சனாபர் ( 18) இவர் புனித அலோசியஸ் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து 578 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பெற்றார் மாணவி சனாபருக்கு தளபதி விஜய் கல்வியியல் இயக்கத்தின் சார்பில் கௌரவப்படுத்தி நடிகர் விஜய் ரசிகர்கள் கல்வி உதவித்தொகை வழங்கினார்கள் இதை தொடர்ந்து கல்லூரி மேல் படிப்பிற்காக கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டம் பிஎஸ்சி ஐடி பிரிவில் சேர்த்துள்ளார்
அந்த மாணவிக்கு கல்லூரி மேல் படிப்புக்காக வருடத்திற்கு 35 ஆயிரம் ரூபாய் வீதம் 3 ஆண்டுகளுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 5000 செலவுத் தொகையினை தளபதி விஜய் ரசிகர் மன்றத்தினர் ஏற்றுக்கொண்டு இதில் ஆறு மாதத்திற்கான ஒரு செமஸ்டர் செலவு தொகையினை ரூ. 17,500 வழங்கினர் மேலும் இது குறித்து மாணவி சனாபர் கூறிய பொழுது விஜய் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நான் 12 ஆம் வகுப்பில் 578 மதிப்பெண் பெற்றுள்ளேன் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துள்ளேன் எனது மேல்படிப்பிற்காக கல்லூரி கல்வி கட்டண தொகையினை விஜய் ரசிகர் மன்றத்தினர் ஏற்றுக்கொண்டனர். எங்களைப் போன்ற படிக்க வசதி இல்லாத பெண்களை தன்னுடைய உதவிகரத்தை நீட்டி எங்களை வாழ வைக்கும் விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுக்கும் என் நிழல் உலக ஆசான் விஜய் அண்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி கூறுகையில் தளபதி விஜய் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு மாவட்ட இளைஞரணி , தாராபுரம் நகரம், மற்றும் நகர இளைஞரணி சார்பாகவும் விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு முன்பு விஜய் அவர்கள் அறிவித்த கல்வி விருது விழா நடைபெற்றது தாராபுரம் கரூர் சாலை காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் விஜய் அவர்களை போலவே மேற்படிப்பிற்கு சிரமப்படும் மாணவர்களை தேர்வு செய்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தெரிவித்து முடிவு செய்து இருந்தோம் இதை அடுத்து தலைமையின் நிர்வாகிகள் ஆலோசனை உடன் தற்போது தாராபுரம் மாணவி சனாபர் 3 ஆண்டுகளுக்கான கல்லூரி தொகையினை வழங்க உள்ளோம் எங்கள் தளபதி ஆணைக்கிணங்க இன்னும் பல நல சமூக நலன் சார்ந்த திட்டங்களை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படுத்துவோம் என்று தெரிவித்தார்