அம்மாபாளையத்தில் அநியாயம்? வெட்டிய மரக்கிளைகளை பயணிகள் நிழல் குடைக்குள் பத்திரமாக வைத்திருப்பதால் பயணிகள் அமர இடமில்லாமல் அவதி! திருப்பூர் திருமுருகன் பூண்டி நகராட்சி அம்மாபாளையம் பேருந்து நிலையம் பயணிகள் நிழல் குடையில் அருகில் வெட்டிய பயனற்ற மரக்கிளைகளை போட்டு வைத்துள்ளனர் இதன் அருகில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகள் பேருந்து வர தாமதமானால் உள்ளே அமர்ந்து காத்திருப்பார்கள் இந்த நிலையில் பயனற்ற கிளைகளை வெட்டியவர்கள்
உடனடியாக வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தாமல் இந்த பேருந்து நிறுத்த நிழற்குடையின் உள்ளே போட்டு அடைத்து வைத்துள்ளது மாணவ, மாணவிகளும், பயணிகளும் வெயில் மழை நேரங்களில் உள்ளே அமர முடியாமல் மிகவும் சிரமமாக உள்ளது என்று கூறுகின்றனர் இதை கண்டுகொள்ளாமல் இருக்கும் திருமுருகன் பூண்டி நகராட்சி நிர்வாகம் உடனடியாக மரக்கிளைகளை அகற்றி பேருந்து நிறுத்த நிழற்குடை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் இந்த செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.