தமிழ்நாடு அரசு மருந்தியல் கல்லூரிக்கு தகுதியின் அடைப்படையில் பேராசிரியர் நியமிக்க கோரிக்கை!

sen reporter
0

 தமிழக அரசின் சார்பில் மருந்தாளுனர்கள் (Pharmacist)பயிலும் மருந்தியல் Partner (College of pharmacy) சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் மருந்தியல் கல்லூரி(College of Pharmacy)மதுரை மருத்துவகல்லூரி இந்த இரண்டு மருந்தியல், மருத்துவ கல்லூரிகளிலும், பட்டப்படிப்பு (B.Pharm)மற்றும் பட்ட மேற்படிப்பு (M.Pharm)போன்ற படிப்புகள் நடைபெற்று கொண்டு வருகிறது.இந்த படிப்பு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம்(AICTE)மற்றும் இந்திய மருந்தியல் குழுமத்தின் (PCI)வழிகாட்டுதலின்படிகண்டிப்பாக குறைந்தபட்ச கல்விதகுதியை பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் (AICTE)தமிழக அரசை 2005ம் ஆண்டு வலியுறுத்தியும், கடந்த 18ஆண்டுகளாக தொடர்ந்து முறையான கல்விதகுதி மற்றும் ஆசிரியர் பயிற்சி அனுபவம் இல்லாதவர்களையே ஆசிரியர்களாக நியமித்து வருகிறது.





.இதனால் தமிழக அரசின் மருந்தியல் கல்வியின் (pharmacy education)தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலில் முறையான மருந்தியல் படிப்பு சென்னை மருந்தியல் கல்லூரியில்தான் (1872)தொடங்கப்பட்டது.அப்படியிருந்தும் தகுதியான பேராசிரியர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்படாத காரணத்தினால் இதுநாள் வரை முழுநேர ஆராய்ச்சி படிப்பு (Phd in pharmacy)துவக்கப்படவில்லை.பெரும்பாலான ஆசிரியர்கள் பணியிடங்கள் 10ஆண்டுகளுக்குமேல் காலியாக உள்ளது.அதனால் மருந்தியல் கல்வியின் தரம் அகில இந்திய அளவில் தமிழக அரசு கல்லூரி பின்தங்கி உள்ளது.அரசு மருத்துவமனைகளில் மருந்தாளராக பணிபுரிந்தவர்களை மாற்றுப்பணி மூலம் குறைந்தபட்ச கல்விதகுதி மற்றும் முறையான ஆசிரியர் பயிற்சி அனுபவம் இல்லாதவர்களை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதனால் தமிழக அரசின் மருந்தியல் கல்வியின் தரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் உயர்கல்வி தரத்தை மேம்படுத்த இந்திய மருந்தியல் குழுமத்தின் வழிகாட்டுதலின்படி குறைந்தபட்ச கல்வி தகுதி மற்றும் முறையான ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கவும் பதவி உயர்வு வழங்கவும் வேண்டுகிறோம்.மேலும், மாற்றுப்பணி மூலம் மருந்தாளுநராக இருந்து ஆசிரியர் பணிக்கு மாறியவர்களில் பெரும்பாலும் இந்திய மருத்துவ கல்வி குழுமம் பரிந்துரை செய்த குறைந்தபட்ச கல்விதகுதியை பெற்றிருக்கவில்லை. 

எனவே,அவர்களின் சான்றிதழ்களை இணை இயக்குனர், மருந்தியல் துறை அவர்களது தலைமையில் ஒரு குழு அமைத்து, இந்திய மருந்தியல் குழுமம் வகுத்த குறைந்தபட்ச ஆசிரியர் தகுதியின் அடிப்படையில் சரிபார்த்து தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.சென்னை மருந்தியல் கல்லூரியில் பட்டப்படிப்பு 258 பணியிடங்களும் பட்டமேற்படிப்பில் 80பணியிடங்களும் தொடர்ந்து மதுரை மருந்தியல் கல்லூரிகளில் 258மருந்தியல் படிக்கும் மாணவர்களும், பட்டமேற்படிப்பு படிக்கும் 90மாணவர்களும், D.pharm படிக்கும் 240 மாணவரகளும், தஞ்சை மருந்தியல் கல்லூரியில் D.Pharm படிக்கும் 120 பணியிடங்களும், கோவை மருந்தியல் கல்லூரியில் D. Pharm படிக்கும் 120 பணியிடங்களும் காலியாகவே உள்ளது.மேலும், மருந்தியல் உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் அல்லது தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்திய மருந்தியல் குழுமம் நியமித்த கல்விதகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டுகிறோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top