தேனி நகராட்சி அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, வரிவசூல் செய்யும் பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.இந்த வரிவசூல் செய்யும் பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது,
இதுகுறித்து எந்தஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் புலம்புகின்றனர். நகராட்சி அலுவலகத்திற்கு வெளிப்புறத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதி இருந்தும் வரிவசூல் செய்யும் பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு..