கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் இன்று(28) பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக உள்ளாட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தரெ.மகேஷ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (28.06.2023) பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
இப்பதவி ஏற்பு நிகழ்ச்சியில் திட்ட குழு உறுப்பினர்களாக பரமேஸ்வரன், .நீலபெருமாள்,.ஜாண்சிலின் விஜிலா, .சிவகுமார், .ராஜேஷ் பாபு, ஆதிலிங்க பெருமாள், .மேரிஜெனட் விஜிலா, விஜிலா, ஜாண் தினேஷ், சிவன், .ராபர்ட் கிளாரன்ஸ், ஸ்டாலின் தாஸ் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், திட்ட இயக்குநர் .பாபு (ஊரக வளர்ச்சி முகமை), மாவட்ட திட்டக்குழு அலுவலர் .இலக்குவன்,மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.