தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா மேல்மங்கலம் ஊராட்சியில் 2வது வார்டு சௌராஸ்டிரா மேலத்தெரு ஈஸ்வரன் கோவில் மேற்கு பகுதியில் கழிவுநீரானது செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளதால் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும்,இப்பகுதியில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்வது வாடிக்கையாகவே காணப்படுகிறது.
கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதாகவும் இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் மேல்மங்கலம் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் கண்டும் காணாமலும் ஊராட்சி நிர்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். கழிவுநீரால் புதிய வகை நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ அச்சஉணர்வுடன் இப்பகுதி மக்கள் உள்ளனர்.கொடிய வகை நோயால் பாதிப்பு ஏற்படும் முன் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடி பார்வையில் கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒற்றை கோரிக்கை விடுத்துள்ளனர்.