ஆரல்வாய்மொழி அருகே பிஜேபி பிரச்சார வாகனத்தின் மீது கல்வீசியதாக மூன்று பேரை ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்துள்ளனர்.இது தொடர்பான விவரமாவது
நாகர்கோவிலில் வரும் 2 ம்தேதி குமரி சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்ற உள்ளார்.இதற்காக குமரி மாவட்ட பிஜேபி சார்பில் பிரச்சார வாகனங்கள் இயங்குகின்றன. இதில் ஒரு வாகனம் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்துக்கு உட்பட்ட செண்பகராமன்புதூர் அருகே கடந்த 28ஆம் தேதி செல்லும் போது பிரச்சார வாகனம் தாக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பிஜேபியினர் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரை விசாரித்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான இருசக்கர வாகனத்தின் எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் மாதவலாயம் , மேலத்தெரு பகுதியை சார்ந்த முகமது ஹனிபா என்பவர் மகன் நஜாத் மைதீன் மற்றும் கண்ணன்புதூர், பட்டர்குளம்காலனி, நடுத்தெரு பகுதியை சார்ந்த செல்வராஜ் என்பவர் மகன் அஜித்பிரபாகரன் ஆகியோர் வாகனத்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது இதனை தொடர்ந்து ஆரல்வாய்மொழி உதவி ஆய்வாளர் கீதா தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார் செய்தார்.