. மாமன்ற கூட்டம் நாகர்கோவில்

sen reporter
0

 நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் மாநகராட்சியை அவமானப்படுத்தும் விதமாக  நடந்து கொண்டதோடு உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்ட மதிமுக உறுப்பினர் உதயகுமார் மேயரின் உத்தரவின் பேரில் அவையை விட்டு வெளியேற்றப்பட்டார் மேலும் அவர் மீது வடசேரி காவல்துறையில் புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது .



நாகர்கோவில் மாநகராட்சியின் 5வது வார்டு  உறுப்பினர் உதயகுமார் . இவர் மதிமுகவை சேர்ந்தவர். மாமன்ற கூட்டம்  துவங்கப்பட்ட காலத்திலிருந்து அவையில் பல்வேறு புகார் மனுக்களை கொடுத்துக் கொண்டே இருந்தார் .கிடைக்கின்ற நேரம் முழுவதும் இவர் எடுத்துக் கொள்வதாக பல கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு வைத்திருந்தனர் .இதனால் இவர் மீது மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு நிலையிலே இருந்து வந்தார்கள். இந்த நிலையில் நேற்று 30 ம்  தேதி மாமன்ற  கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் துணை மேயர் மேரி பிரின்சிலதா ஆணையர்  மோகன் ஆனந்த் முன்னிலையில் கூடியது. கூட்டம் கூடியதும் முதலில் திருக்குறள் வாசிக்கப்பட்ட உடன்  உடனடியாக எழுந்த உதயகுமார் தான் பல்வேறு புகார் மனுக்களை கடந்த  கூட்டத்தில் வைத்ததாகவும் அதற்கு மாமன்றம் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் இருக்கப் முனைந்தார் .இவரது போராட்டம் தவறு என 42 வது வார்டு உறுப்பினர் ஸ்டாலின் பிரகாஷ் 1 வார்டு உறுப்பினர் தங்க ராஜா மண்டல தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் அப்போது தரையில் உட்கார்ந்து  போராட்டத்திற்கு ஈடுபட முணைந்த கவுன்சிலர் உதயகுமாரை வெளியேற்ற மேயர் உத்தரவிட்டார். 

இதன்படி கவுன்சிலர் உதயகுமார் வெளியேற்றப்பட்டார் பின்னர் அவர் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டார் வெளியேறியவுடன் சில நிமிடங்களில் மீண்டும் அவர் மாமன்றத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டார் இறுதியாக மாமன்ற கூட்டம் முடிந்தவுடன் அவர் போலீஸ் பாதுகாப்புக்குள் வைக்கப்பட்டார். தொடர்ந்து மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் ஐயப்பன் ரமேஷ் முத்துராமன் மண்டல தலைவர் செல்வகுமார் கௌசிகா ரோசிட்டா திருமால் டி ஆர் செல்வம் சேகர் அருள் சோபிதாரெக்சின் சிஜி உள்ளிட்ட கவுண்சிலர்களின்   கேள்விகளுக்கு மேயர் பதிலளித்தார்.  கவுன்சிலர் ஐயப்பன் பேசும்போது தனது வார்டுக்கு உட்பட்ட பல பகுதிகள் தற்போது மாநகராட்சிகள் இணைக்கப்பட்டது என்றும் ஏற்கனவே அவை பஞ்சாயத்து பகுதியில் இருந்ததால் அப்போது கட்டுமான பணி தொடங்கி முடிக்கப்பட்ட பல கட்டிடங்களுக்கு மின்வாரிய இணைப்பும்  நகராட்சி வரியும்  கொடுக்கப்படவில்லை இதற்கு கட்டுமானத்திற்கானஎன் ஓ.சி வாங்க வேண்டும் என்கிறார்கள் . நிர்வாகத்தில் கேட்டால் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு என்ஓசி தர இயலாது என்கின்றனர். இதனால் பல வியாபாரிகளும் கட்டிட உரிமையாளர்களும் சிரமத்தில் உள்ளதாகபுகார் தெரிவித்தார் . இதற்குப் பதில் அளித்த மேயர் மாமன்ற  விதிகள் உட்பட்டு கட்டுமான பணிகளுக்கு வரிகள் விதிக்கப்படுகிறது தாங்கள் சொல்கின்ற கருத்தின் படி அது ஏற்றுக்கொள்ள இயலாது என்றார் இடை மறித்த  உறுப்பினர் ரமேஷ் இந்த ஒரு முறையும் இதை விட்டுவிட்டு இனி வரும் காலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மாமன்ற விதியை பயன்படுத்தலாமே என்று குறிப்பிட்டார் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என மேயர் பதிலளித்தார்  .




முன்னதாக மேயர் பேசுகின்ற போது மன்ற உறுப்பினர்கள் தரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும் யாரும் தனிப்பட்ட விமர்சனங்கள் வைக்க வேண்டாம் என்றும் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகள் குறைகள் அனைத்தும் விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டு வருவதாகவும் ஒருமுறை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு அது பற்றி அடுத்த மன்ற கூட்டத்தில் பேசக்கூடாது என்று சட்டம் இருப்பதாகவும் மிகவும் சந்தோஷமாக அனைத்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்ற  இந்த வேளையில் சில உறுப்பினர்கள் வேண்டுமென்றே அவையில் குற்றச்சாட்டுகளை வைத்து வருவதாக குறிப்பிட்டார் தொடர்ந்து பேசிய அவர் இவ்வாறு முறையற்ற புகார்களை சொல்லும் கவுன்சிலர்கள் பின்னால் வருந்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார் மாநகர மன்றத்தின் ஐந்தாவது வார்டு உறுப்பினர் பல கோரிக்கை மனுக்களை வைத்துள்ளார் பல குறைகளையும் அவர் கூறி வருகிறார் இதற்கான ஆதாரங்களை அவர் நாங்கள் அவரிடம் கேட்டு உள்ளோம் ஆனால் அவர் எதையுமே தராமல் குறை மட்டும் சொல்லி வருகிறார் நாகர்கோவில் நீதிமன்ற சாலை ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக 25 லட்ச ரூபாய் மாமன்றத்தில் இருந்தும் 25 லட்ச ரூபாய் வியாபாரியிடம் இருந்து வசூலிக்கப்பட்டது நிதி உதவி செய்த 9 வியாபாரிகளுக்கு  அமைச்சர்  நேரு மூலமாக பாராட்டு பத்திரங்களும் சால்வைகளை அணிவிக்கப்பட்டது அதில் யார் யார் எவ்வளவு தொகை நிதி கொடுத்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது அப்போது மேடையில் பல உயர் அதிகாரிகளும் புதிதாக பதவியேற்க இருக்கும் உள்துறை செயலாளரும் இருந்தார் ஆனால் மன்ற உறுப்பினர் நமக்கு நாமே திட்டத்தில் 67 லட்ச ரூபாய் பெறப்பட்டதாகவும் அதில் 25 லட்சம் தான் கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும் மீதி பணம் ஊழலாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்

 இதை அவர் நிரூபிக்க வேண்டும் என்று தான் நான் கூறுகிறேன் அவ்வாறு தவறு நடந்திருக்கும் பட்சத்தில் தலைமை என்னை விட்டு வைக்காது நானும் அந்த நிலைமைக்கு செல்ல மாட்டேன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நானே ராஜினாமா செய்து கொள்வேன் என்றார்.மேலும் நாகர்கோவில் புது குடியிருப்பில் உள்ள சுப்பையா குளம் ஆழப்படுத்தப்பட்டது இதில் டெண்டரை விட அதிக அளவில் ஆழம் தோண்டப்பட்டு மண் எடுக்கப்பட்டு விற்கப்பட்டதாக ஒப்பந்தக்காரர் மீது குற்றம் சாட்டுகிறார் உறுப்பினர் 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த டெண்டர் இருக்கு மண் எடுத்து வெளியேற்றுவதற்கு மட்டும் ஆறு லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து கொடுத்து இருக்கிறோம் இன்னும் 40 லட்ச ரூபாய் அந்த டெண்டர்கள் கட்ட வேண்டியது உள்ளது குளத்தை அழகுபடுத்தி நடைபாதை அமைத்த பின்பு மீதி தொகை வழங்கப்படும் அதிக அளவில் மணலை வெளியே கடத்தி விட்டார் என்று சொல்லும் அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டு இருந்தார் நேரடியாக வந்திருந்து அந்த லாரிகளை நீங்கள் பிடித்து  இருக்கலோமே ஆணையரை அழைத்து சென்று குற்றம் சாட்டை நிரூபித்து இருக்கலாம் எல்லாம் முடிந்த பின்பு இவர் குற்றச்சாட்டுவது தவறானது அதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டுகிறார் இதுகுறித்து கழிந்த மன்ற கூட்டத்திலே முடிவு செய்யப்பட்டு விட்டது மீண்டும் அதே குற்றச்சாட்டை வைத்து இந்த முறை அவர் வெளிநடப்பு செய்கிறார் சட்ட விதிகளின்படி ஒரு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட  அதே தீர்மானத்தை மறுபடியும் மன்றத்தில் கொண்டு வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று விதி இருக்கிறது இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்ற விதியும் இருக்கிறது இதன் அடிப்படையில் தான் அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன என்ற அவர் தற்போது தோழமைக் கட்சி நண்பர்களும் எதிர்க்கட்சியினரும் கழக கவுண்சிலர்களும் இந்த ஒரு முறை அவரை எச்சரித்து விட்டுவிடும் படியும் மேலும் எந்தவிதமான அவதூறு நடவடிக்கை நடக்காது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர் மாமன்றத்தை பற்றியும் அரசு பற்றியும் அவர் குறை கூறுவது சரியல்ல என்பது என் வாதம் இருப்பினும் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அவர் மீது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என செயற்பொறியாளருக்கு  கருத்து கூறியுள்ளேன் என்றார் மேயர் அவருடைய குற்றச்சாட்டில் ஒரு வேடிக்கை இருக்கிறது மாநகராட்சிக்கு தண்ணீர் கொண்டு வரும் புத்தன்அணை திட்டம்  2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது 1.5 அடி ஆழத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென்று டெண்டர் விடப்பட்டு பணியும் முடிந்து விட்டது. 

 உறுப்பினர் இந்தத் திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் தரம் அற்றது என்று குற்றம் சாட்டி உள்ளார் இதை அவர் மன்றத்தில் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை தவறு இருந்தால் அதை குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் அவர் முறையிட்டு இருக்க வேண்டும் 2014 ஆம் ஆண்டு போடப்பட்ட திட்டத்திற்கு 2023 குறை சொல்வது எப்படி ஏற்றுக்கொள்ள இயலும் அது அப்போது போடப்பட்ட டெண்டர் அப்போது குறிப்பிடப்பட்ட பணி ஆகும் அண்ணா பேருந்து நிலையத்தில்  முடிந்த பணிகள் தர மற்றவை என்றும் அந்தப் பணிகளை ஐஐடி முடித்தவர்களை வைத்து தரப்பரிசோதனை செய்ய வேண்டும் என்று குற்றம் சாட்டி உள்ளார் ஏற்கனவே இந்த பணிகள் முறையாக முடிக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர்கள் ஆணையாளர் மேற்பார்வையில் திட்டம் முழுமை பெற்றுள்ளது இதில் குறை இருந்தால் அவர் நேரடியாக குற்றம் சாட்டி இருக்கலாம் மறைமுகமாக இருந்திருக்கலாம் நடந்திருக்கலாம் என்ற என்ற சொல் தேவையற்றது. தவறை அவர் நிரூபிக்க வேண்டும். சாலை மேம்பாட்டு பணி 70 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகையில் இதில் 35 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார் சாலைகள் தரம் அற்று போடப்படுவதாகவும் சொல்கிறார் இதை அவர் நிருபித்துகாட்ட வேண்டும் இது மாமன்றத்தையும் அரசையும் குறை கூறுவதாக இருக்கிறது இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாமன்றம் முனைந்து உள்ளது  என்ற அவர் இனி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் பொதுமக்கள் நேரடியாக தங்களது கோரிக்கை மனுக்களை மான்றத்தில் வைக்கலாம் என்றும் அதே இடத்தில் அனைத்து அதிகாரிகளும் இருப்பார்கள் என்றும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு அவ்வப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வரும் வியாழக்கிழமை முதல் மக்கள் முகாம் நடத்தப்பட இருப்பதாக நாகர்கோவில்  மாநகர மேயர் மகேஷ் தெரிவித்தார்.  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top