கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து முகநூலில் ஆபாச கருத்து பதிவிட்ட பாஜக பிரமுகரை கைது செய்ய கோரி கடந்த இரு தினங்களாக காவல் நிலையங்களில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்து வந்தனர்.
புகார் மனுவை காவல்துறையினர் கண்டுகொள்ளாத நிலையில் எஸ்பி அலுவலகத்தை மாநகர தலைவர் நவீன்குமார் தலைமையில் முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் மேற்கொண்டனர். பின்னர் நாகர்கோவில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து காங்கிரசார் போராட்டத்தை கைவிட்டனர்