தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நாகர்கோவில் கோட்டார் தேசிய விநாயகம் பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. முகாமினை குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான ரெ மகேஷ் தொடங்கி வைத்தார்.
.நிகழ்வில் அவர் பேசும்போது வீடுதோறும் மருத்துவம் மாவட்டம் தோறும் மருத்துவ கல்லூரி அனைத்து மருத்துவமனைகளிலும் சித்தா மருத்துவம் ஆம்புலன்ஸ் 108 ஆம்புலன்ஸ் என மருத்துவத்துறைக்கு பல நல்ல காரியங்களை கொண்டுவந்தவர் கலைஞர் அவர்கள் ஆகவே தான் அவர் பிறந்த நூற்றாண்டை கொண்டாடும் விதமாக மருத்துவமுகாம் நடைபெறுகிறது. இன்று(24) குமரி மாவட்டத்தில் நான்கு இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது. எல்லா முகாம்களை போல அன்றி இங்கு வரும் ஒவ்வொருவருடைய பெயரும் கம்பியூட்டரில் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவம் குறித்து பதிவு செய்யபப்படும்.
பின் அவர்களுக்கு தொடர்ந்து சிகிட்சை வழங்கப்படும் என்றார். நிகழ்வில் அசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மாநகராட்சி ஆணையர் மோகன் ஆனந்த் துணை மேயர் மேரிபிரின்சி லதா மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி மாமன்ற உறுப்பினர் அன்னலெட்சுமி கழக நிர்வாகிகள் பன்னீர்செல்வம் அகஸ்தீசன் எம்.ஜே.ராஜன் பகுதி பொறுப்பாளர்கள் ஷேக் துரை அருள்செல்வின் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.