மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் தேர்தல் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தேர்தலில் வாக்களிக்கும் நேரம் காலை 10 மணி முதல் 3 வரை என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் வாக்களிக்கும் நேரம் தாமதமாக நடைபெற்றதால் வாக்களிக்கும் நேரத்தை மாலை 4 மணி வரை நீடித்து திட்ட அலுவலர் அறிவித்தார் இந்த நிலையில் மாலை 3.45 மணியளவில் திமுகவை சேர்ந்த கவுண்சிலர்கள் அனுமதியளிக்க கோரினர். ஆனால் காவல்துறையினர் அனுமதியளிக்காததை அடுத்து பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் திட்ட அலுவலர் பாபு அனுமதியளித்ததை அடுத்து அவர்களுக்கு வாக்களியக்க அனுமதியளிக்கப்பட்டது. அதோ நேரம் பிஜேபியினர் கடும்கண்டனம் தெரிவித்தனர்.
நடைபெற்ற மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வில் அதிமுக பிஜேபியை சார்ந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஜான்சி விஜிலா பேராசிரியர் நீலபெருமாள் சிவகுமார் ரமேஷ்பாபு பரமேஸ்வரன் ஆகியோர் தேர்தல் அதிகாரியிடம் வெற்றி சான்றிதழ் பெற்றனர். உடன் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லின் தாஸ் உள்ளார்.