தேனி மாவட்டம் தேவாரத்தில் காவல் நிலையம் அருகே சாக்கடை தேங்கி நிற்பதால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும், இப்பகுதியில் பேருந்து நிலையம் உள்ளதால் சாக்கடை கழிவுநீரால் பயணிகளுக்கு நோய்தொற்று ஏற்பட்டு கொடியவகை விஷகாய்ச்சல் பரவும் சூழ்நிலையும் உள்ளது.
காவல் நிலையத்திற்கும், பேருந்து நிலையத்திற்கும் வரும் பொதுமக்கள் சாக்கடை தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு வைத்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என பொதுமக்கள் புலம்புகின்றனர். மேலும்,குடியிருப்பு பகுதிகளும் அருகே உள்ளதால் தொற்றுநோய் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேருந்து பயணிகளும், உள்ளூர் வாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.