மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.07.2023) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை - 2023" மாநிலஅளவிலான போட்டிகள்
நிறைவு விழாவில், அதிக பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்ற செங்கல்பட்டு மாவட்ட அணிக்கு பரிசுக் கோப்பையை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஏ. ஆர். ராகுல்நாத், இ.ஆ.ப., மாவட்ட விளையாட்டு அலுவலர், விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் ஆகியோரிடம் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு இந்து சமயம் மற்றும்
அறநிலையங்கள் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநாகராட்சி மேயர் திருமதி.ஆர். பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப.,
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.