குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்டது கோட்டார் பகுதி. இங்கு கவிமணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளி அருகில் பல வருடங்களாக தெருப்பாதையை ஆக்கிரமித்து டீக்கடை ஒன்றை தனி நபர் நடத்தி வந்தார். டீ கடை இருக்கும் பகுதி பொது பாதை என்றும் டீகடை நடத்துபவர் பாதையை மறைத்து ஆக்கிரமித்துள்ளார்
. ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் பொது பாதை உருவாக்க வேண்டுமென பொதுமக்கள் மாநகர மேயர் மகேஷ் இடம் கோரிக்கை வைத்து இருந்தனர். கோரிக்கையை ஏற்ற அவர் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார் . அது பொதுபாதை என வு ம் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அறிந்த அவர் உடனடியாக மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதற்கு மாநகராட்சிக்கு கோட்டார் குருந்தெரு மக்கள் மாபெரும் நன்றியை தெரிவித்துள்ளனர் மேலும் அந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தர நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் க்கு குறுந்தெரு மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் கோரிக்கை வைத்துள்ளனர் .