நீலகிரி மாவட்டம் பந்தலூர் கொளப்பள்ளி அருகே உள்ள தட்டாம்பாறை பகுதியில் காட்டு யானை உலா வருகிறது இந்நிலையில் இன்று அய்யன்கொள்ளி . பந்தலூர் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று காட்டு யானைகள் உலா வந்தன.
இதனை கண்ட வனத்துறையினர் துரத்தும் முயற்சியில் ஈடுபட்டன அப்பொழுது சிறிது தூரம் ஓடி சென்ற யானை கூட்டம் திரும்பி வந்து வாகனத்தை விரட்டியது இதனால் சிறிது நேரம் பகுதி பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் காட்டு யானை ஊருக்குள் வந்து அடிக்கடி வீடுகளை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது ஆகவே அரசு அதிகாரிகள் காட்டு யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட செய்தியாளர்
Dr
G.ரஜினிகாந்த்