!தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாமஸ் காலனியில் தாழ்த்தப்பட்டவரான ராஜசேகரன் என்பவரின் வீடுபுகுந்து தாக்கியும், வீட்டில் உள்ள பெண்களை தரக்குறைவாக பேசியும், ராஜசேகரனின் சமூகத்தை பற்றி தவறாக பேசியும் வன்முறையில் ஈடுபட்ட உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர்களை உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததை தொடர்ந்து நமது Sen News Media செய்தியின் மூலம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுத்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும்,முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுத்த உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சிலைமணி அவர்களையும் பொதுமக்கள் பாராட்டிய வண்ணம் உள்ளனர். பொதுமக்களுடன் சேர்ந்து அவர்களுக்கு நமது Sen News Media செய்தியின் சார்பாகவும் நன்றி...