குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்ற மாபெரும் விழிப்புணர்வு நடைபயண ம்

sen reporter
0
கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்ற                     மாபெரும் விழிப்புணர்வு நடைபயண (வாக்கத்தான்) பேரணியிணை பால்வளத் துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ்   துவக்கி வைத்தார்கள்.



கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் லெட்ஸ்டு டெக்மேட் ஐடி நிறுவனம் இணைந்து நடத்திய  குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாறுவோம் என்ற தலைப்பில் குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட கான்வென்ட் சந்திப்பில் துவங்கிய மாபெரும் விழிப்புணர்வு நடைபயண (வாக்கத்தான்) பேரணியினை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் .கௌசிக், ,  முன்னிலையில் இன்று (08.07.2023)துவக்கி வைத்தார் நிகழ்வில் பேசும் போது -

கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா குமரியாக மாற்றுவதற்கு பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு முதல் கல்லடிமாமுடு வரை சுமார் 5 கி.மீ வரை கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வியாபார சங்க பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்ட  மாபெரும் நடைபயண (வாக்கத்தான்) விழிப்புணர்வு பேரணியினை இன்றையதினம் துவக்கி வைத்து, கலந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழிப்புணர்வு நடைபயணத்தின்நோக்கம் குமரி மாவட்டத்தை முழு சுகாதாரமான மாவட்டமாக மற்றுவதோடு பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாகவும் குப்பையில்லா மாவட்டமாகவும் மாற்றுவதேயாகும்.

 இதுபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குப்பையில்லா குமரியாக மாற்ற பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் நடைபெற இருக்கிறது. 
குப்பையில்லா குமரி என்ற திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது ஆகும். எனவே, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

  இதன் நோக்கம் நமது மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகள் தேங்குவதை தடுத்தல், ஒவ்வொரு வீடுகளிலும் கழிவுநீர் உறிஞ்சு குழிகள் அமைத்தல், இயற்கை வளத்தையும், சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் நாம் அனைவரும் மரங்களை நடவு செய்தல், குளங்களை பராமரித்தல், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்துதல்,   குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து கொடுத்தல், மக்கும் குப்பைகளை குழாய் வழி உரமாக்குவது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை முன்வைத்து இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது. 
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு முறை பயன்டுத்தப்படும் பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது 95 சதவீதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனை 100 சதவீதமாக மாற்றுவதற்கான முயற்சியினை முழு வீழ்ச்சில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். அதற்கு ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்களுக்கு இத்தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
நமது மாவட்டம் குப்பையில்லா மாவட்டமாகவும், பசுமை மாவட்டமாகவும், நெகிழி இல்லா மாவட்டமாகவும் மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.என  பால்வளத் துறை அமைச்சர்   த.மனோ தங்கராஜ்  தெரிவித்தார்.
இந்த நடைபயணமானது குலசேகரம் கான்வெட் சந்திப்பில் துவங்கி, குலசேகரம் அரசு மருத்துவமனை சாலை, அண்ணா நகர், அரசமூடு, செட்டித்தெரு, காவஸ்தலம், கல்வெட்டான்குழி, மணலிவிளை, குலசேகரம் சந்தை, செருப்பாலூர், தெங்குவிளை, இட்டகவேலி, சாணிக்கரைகாடு, புலியிரங்கி வழியாக கல்லடிமாமூட்டில் நிறைவடைந்தது. 
நடைபணத்தின் போது,  பால்வளத் துறை அமைச்சர்                         .த.மனோ தங்கராஜ்  வீடுகளில் உறிஞ்சுகுழிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்கள்.

நடைபெற்ற நடைபயணத்தில், , அரசு வழக்கறிஞர்கள் ஜாண்சன், .ஜெகதேவ், பேரூராட்சி தலைவர்கள் ஜெயந்தி ஜோம்ஸ் (குலசேகரம்), பெனிலா (திருவட்டார்),.ரவி (திற்பரப்பு), குலசசேகரம் பேரூராட்சி துணை தலைவர் ஜோஸ் எட்வர்டு, ஊராட்சி தலைவர்கள் விமலா (சுருளகோடு), .சாலெட் மேரி (அருவிக்கரை), லெட்ஸ்டு மேலாண் இயக்குநர் .ஜெரின் ஜோஸ நேசமணி, .ராஜ், சுரேஷ் உட்பட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ மாணவியர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top