குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட ,மாநகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சி.டி.சுரேஷ் ஆகியோர் தலைமையில் ஒழுகினசேரியில் அமைந்துள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான ரெ. மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பிரிட்டோ சேம், விஜய் ,பொன் ஜான்சன் ,பிரபு, சரவணன் ஆகியோரும் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சிடி சுரேஷ் துணை அமைப்பாளர்கள் கராத்தே ராஜேஷ் ,முத்துக்குமார், விசாக் மோகன், அருள்செல்வின், அபிலாஷ் ,மோகன்ராஜ், அகமத்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.