தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முகஸ்டாலின் ஆட்சியின் இரண்டு ஆண்டுக்கால சாதனைகளை தெரு தெருவாக பிரச்சாரம் மேற்கொள்ளும்வாகன பிரச்சாரத்தை வடசேரி அண்ணா சிலை முன்பு இருந்து குமரி கிழக்குமாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ் துவக்கி வைத்தார்.
நாகர்கோவில் மாநகர திமுக சார்பில் கழக ஆட்சியில் இரண்டு ஆண்டு கால சாதனைகளை விளக்கி நாகர்கோவில் மாநகர முழுவதும் தெருத்தெருவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் வாகன பிரச்சாரத்தை குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேருமான மகேஷ் மாநகர செயலாளர் ஆனந்த் தலைமையில் துவக்கி வைத்தார்
நிகழ்வில் மாநில அமைப்பு துணை செயலாளர் ஆஸ்டின் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் மாநில மீனவரணி துணைச் செயலாளர் பசலியான் மாநில கலை இலக்கிய பேரவை செயலாளர் தில்லைசெல்வம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் முன்னாள் அமைப்பாளர் சிவராஜ் கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ்குமார் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் லதா மாநகர அவை தலைவர் பன்னீர்செல்வம் துணைமேயர் மேரி பிரின்சிலதா மாநகர இளைஞரணி அமைப்பாளர் சிடி சுரேஷ் துணை அமைப்பாளர்கள் அருள்செல்வின் அகமதுஷா ராஜேஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன் மாணவரணி சதாசிவம் மாநகரத் துணைச் செயலாளர் வேல்முருகன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கழக முன்னணியினர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் மகேஷ் பேசும்போது கடந்த இரண்டு ஆண்டு காலமாக தமிழக முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலின் தலைமையில் மிகச் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .
இன்நிலையில் நாகர்கோவில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை மிகவும் தரக்குறைவாக திமுகவை விமர்சனம் செய்தார் அவருக்கு பதில் கொடுக்கின்ற வகையில் நாகர்கோவில் மாநகர திமுக சார்பில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொள்ளும் வாகன பிரச்சாரத்தை இது துவங்கி வைத்துள்ளேன் மாநகரம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தெருத்தெருவாக சென்று கழக ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை இந்த பிரச்சார வாகன மேற்கொள்ளும் கடந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 இடங்களை நாம் பெற்றோம் ஒரே ஒரு இடத்தை மட்டும் அதிமுக தக்க வைத்தது இருப்பினும் அதுவும் இங்கு செல்லாதது அறிவிக்கப்பட்டு விட்டது எனவே 40-ம் நாமே என்ற நிலையில் இருக்கிறோம் இதேபோல் வருகின்ற தேர்தலிலும் நாம் 40க்கு 40 பெற வேண்டும்.
அதற்காக இப்பொழுதே உழைக்க வேண்டும் இன்னும் ஐந்து மாதத்திற்குள் தேர்தல் வரலாம் எனவே நாம் அதுவரை காத்திருக்காது இப்போதைய பிரச்சாரத்தை மேற்கொண்டு நாம் கழகத்தை வலுப்படுத்த வெற்றி பெற செய்ய வேண்டும் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதும் கவர்னர் தேவையற்று பேசி வருகிறார் எனவே இதை மனதில் வைத்து பாஜகவை அதிமுகவோ வெற்றி பெற கூடாது என்ற நிலையில் கடும் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார் ..தொடர்ந்து பிரச்சாரம் துவக்கி வைத்தார் ..