தேனி மாவட்ட தேமுதிக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவரின் அறிவுறுத்தலின்படி வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கோம்பையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோம்பை பேரூர் செயலாளர் K.முருகன் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..
மேலும், இந்த நிகழ்வில் கோம்பை பொருளாளர் கணேசன், பேரூர் அவைத்தலைவர் ஆண்டவர், துணைச்செயலாளர்கள் மாரிதாஸ், பாண்டியன், மூகாஸ் என்ற மாரிமுத்து மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.