கொரோணா காலத்தில் தமிழக அரசு வழங்கிய நிதியைபொக்கை வாய் மூலம் சிரித்து பெற்று தமிழக முதலமைச்சரின் மனதில் இடம் பிடித்த கன்னியாகுமரி மாவட்டம் கீழக்lகலுங்கடி பகுதியைச் சேர்ந்த 92 வயதான புன்னகை சிரிப்புக்கு சொந்தமான வேலம்மாள் பாட்டி காலமானார்.
அவரது மறைக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்தார். மேலும் வேலம்மாள்பாட்டி மறைந்த செய்தி அறிந்து குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான ரெ மகேஷ் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
உடன் அகஸ்தீஸ்வரம் யூனியன் கவுண்சிலர் அருண்காந்த் மற்றும் பகுதி பொறுப்பாளர் ஷேக் உட்பட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்