தேனியில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!
தேனி பழைய பேருந்து நிலையத்தில் பெரியகுளம் சட்டமன்ற காங்கிரஸ் சார்பில் மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும்,மாநில பாஜக அரசை டிஸ்மிஸ் செய்திட கோரியும் மெழுகுவர்த்தி எந்திய போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையிலும், தேனி நகர காங்கிரஸ் தலைவர் கோபிநாத் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.